திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற மூவர் கைது

1பார்த்தது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற மூவர் கைது
திருச்சி விமான நிலைய பாரதிநகர் விரிவாக்கப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், போதை மாத்திரைகள் விற்ற கார்த்திகேயன் (23) கைது செய்யப்பட்டார். இதேபோல், இ.பி. சாலை சத்தியமூர்த்தி நகரில் ஸ்ரீராம் (22) மற்றும் தேவதானம் பகுதியில் ராமச்சந்திரன் (19) ஆகியோரும் போதை மாத்திரைகள் விற்றதாகக் கைது செய்யப்பட்டனர். போலீஸார் மூவரிடமிருந்து 45 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி