துறையூர் நகரில் காலை வேளைகளில் பள்ளி பேருந்துகள், அலுவலகம் செல்வோர், இருசக்கர வாகனங்கள் அதிகரிப்பதால் திருச்சி சாலை, பாலக்கரை, பெரிய கடை வீதி, ஆஸ்பத்திரி சாலை, முசிறி பிரிவு சாலை போன்ற முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனையை சரிசெய்ய, காலை நேரங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.