திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் விமல்ராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற புதுக்கோட்டை விராலிமலையைச் சேர்ந்த லோகேஸ்வரன் (21) மற்றும் எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த லோகநாதன் (21) ஆகியோரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.