திருச்சி திருவெறுமாபூர் பெல் திருமண மஹாலில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ. 23. 44 கோடியில் 215 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 28 கோடி என மொத்தம் 215 பயனாளிகளுக்கு ரூ. 59. 78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.