திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எஸ். ரத்தினம் (58) என்பவரை, மன்னாா்புரம் காஜா நகரைச் சேர்ந்த எம். ராஜேஸ்கண்ணன் (34) மற்றும் ஆ. பிரகாஷ் (21) ஆகியோர் திங்கள்கிழமை மாலை கத்தியால் குத்தினர். ஏற்கெனவே இருந்த பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரத்தினத்தின் புகாரின்பேரில், கே. கே. நகா் போலீஸார் இருவரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.