திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு

754பார்த்தது
திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு
திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த 71 வயதான மா. பழனிவேல், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில் கைதாகி, கடந்த டிசம்பர் 20, 2024 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீரிழிவு மற்றும் இருதய பாதிப்பு இருந்த அவருக்கு, திங்கள்கிழமை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி