திருச்சி - மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் நடத்தினர்

425பார்த்தது
திருச்சியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள், வ.உ.சி. சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 40 பெண்கள் உட்பட 150 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி