திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் சங்கிலி (வயது 83). சம்பவம் நடந்த நேற்று (மே 8) தனது இருசக்கர வாகனத்தில் மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார் அப்போது இவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று இவருடைய பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த முதியவர் சங்கிலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மணிகண்டம் போலீசார் முதியவர் சங்கிலியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான சென்னை துறைப்பாக்கத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.