திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி, காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக கடந்த ஏழாம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சோமரசம் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.