திருச்சி: மக்காச்சோளத்தைக் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

8பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் மக்காச்சோளத்தைக் கொட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து, ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தொடர்புடைய செய்தி