திருச்சி மாவட்டம் வையம்பட்டி காவல் சரகத்துக்குள்பட்ட நடுப்பட்டியில் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த நல்லுச்சாமி மகன் வீராச்சாமி (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.