திருச்சி கைதி தற்கொலை முயற்சி 5காவலர்கள் பணியிட மாற்றம்

1பார்த்தது
திருச்சி கைதி தற்கொலை முயற்சி 5காவலர்கள் பணியிட மாற்றம்
திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கத்தில் சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த கைதி ஒருவர், காவல் கண்காணிப்பில் இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி ஆய்வாளர் முத்துக்கண்ணு, உதவி ஆய்வாளர் கார்த்திக், ஏட்டு ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்பி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.