திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை இயந்திரப்பராமரிப்பு பொறியாளர் சர்வாதிகாரத்தனத்துடன் நடந்து கொள்வதாகவும், பராமரிப்பு பணிகளுக்கு உரிய உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டி எஸ். ஆர். எம். யூ. தொழிற்சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளரின் நடவடிக்கைகளால் ரயில்வே பணிகள் பாதிக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.