திருச்சி: ஹிந்தி எழுத்துக்களை மை பூசி அழித்த தி. மு. கவினர்

0பார்த்தது
திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள மண்டல ரயில்வே அலுவலக கல்வெட்டு மற்றும் நுழைவு வாயில் பகுதியில் ஹிந்தி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், மத்திய அரசு ஹிந்தியை தமிழ்நாட்டுக்குள் திணிக்கிறது என்றும், இதனை உடனடியாக அகற்றாவிட்டால் மத்திய அரசுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, காஜாமலை விஜய் மற்றும் நிர்வாகிகள் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து அங்குள்ள கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தனர்.

தொடர்புடைய செய்தி