இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் பிஷப் கீப்பர் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்யவும், புதிய வாக்காளர்களை சேர்க்கவும், நீக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நோக்கில் நடைபெற்றது.