திருச்சி நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (49) என்பவரின் மனைவி கோகிலா (49), நேற்று முன்தினம் இரவு மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே நடந்து சென்றபோது, எதிரே வந்த கார் மோதி படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.