திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மல்லியம்பத்து பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் வேலழகன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, முகமது ரியாஸ் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 65.400 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.