திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூதாட்டி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.