திருச்சி ஹீபர் ரோட்டில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலைய எதிரில், அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு அளித்த புகாரின் பேரில், செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.