திருச்சியில் செல்போன் பறித்த வாலிபர் கைது

54பார்த்தது
திருச்சியில் செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்சி மலைக்கோட்டை வடக்கு ஆண்டாள் வீதியைச் சேர்ந்தவர் மோகன் கடந்த ஒன்றாம் தேதி அன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் இவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிக்க முயற்சி செய்தார். அதிர்ச்சி அடைந்த மோகன் தடுத்தார். அப்போது அந்த நபர் மோகன் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து கண்டோண்மெண்ட் போலீஸில் வழக்கு பதிந்து புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி குருத்தாங்கல்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர்.