லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பால்ராஜ், தான் வளர்த்து வந்த ஆடு உயிரிழந்ததால் ஏற்பட்ட துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.