திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இரண்டு பயணிகள் தலா ஆறு வீதம் 12 ட்ரோன்களை ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் ட்ரோன்களை பறிமுதல் செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.