மண்ணச்சநல்லூர் மளிகை கடையில் 19 கிலோ குட்கா பறிமுதல்

61பார்த்தது
மண்ணச்சநல்லூர் மளிகை கடையில் 19 கிலோ குட்கா பறிமுதல்
மண்ணச்சநல்லூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட துர்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து எஸ்பி உத்தரவின்படி மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராமன் மண்ணச்சநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி குட்கா விற்பனை செய்தவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் கீழ காவல்காரத் தெருவருகே உள்ள பிரபலமான மளிகைக் கடையில் போலீசார் சோதனை செய்ததில் சுமார் 19 கிலோ மதிப்புள்ள குட்காவை கடையிலும் வீட்டிலும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் மளிகைக் கடை உரிமையாளர் ரமேஷ் என்பவரை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி