திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் தபால் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று ராமசாமி உயிரிழந்தார். அவர்களது குடும்பத்தினர் ராமசாமியின் கண்களை தானமாக அளிக்க முன்வந்து தனியார் மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கு கண்களை தானம் செய்தனர்.
மேலும் கிஅபே விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் அவரது உடலை தானமாக கொடுக்க அவரது குடும்பத்தினர் முன்வந்து நேற்று அவரது உடலை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக அவரது இல்லத்திலிருந்து அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் மண்ணச்சநல்லூர் தாசில்தார், பழனிவேல் மற்றும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.