திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் விஜய், நேற்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.