திருச்சி மாநகரில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன்களை வாகனங்களில் பொருத்தியிருந்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. திருச்சி மாநகரில் வாகனங்களில் அதிகமான ஒலி எழுப்பும் வகையான ஏர்ஹார்ன்களை பொருத்தி ஒலி மாசு ஏற்படுத்தக் கூடாது என திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாநகர போக்குவரத்து போலீசார் அனைத்து விதமான வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதையும் மீறி சில வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய வகையான ஏர்ஹார்ன்களை பொருத்தி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிப்பதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று 25 வாகனங்களில் கிழக்கு வட்டாரம் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செந்தில் பாலக்கரை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் கோட்டை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சோதனை மேற்கொண்டார். இதில் 10 வாகனங்களில் ஏர் ஹார்ன்களை பொருத்தியிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.