திருச்சி துவரங்குறிச்சி அரசுடமையாக்கப்பட்ட வங்கி அருகே பதிவு எண் இல்லாத வெள்ளை நிற கார் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். கரூர் குளித்தலையில் நேற்று (ஆகஸ்ட் 18) தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய காராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.