திருச்சி பொன்மலையைச் சேர்ந்த ஜெமி கண்ணன் மற்றும் துவாக்குடியைச் சேர்ந்த கோகுல்ராஜ் இருவரும் சிறுகனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். கல்லூரி முடிந்து சமயபுரம் உப்பாற்று பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, வாகனம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்ததில் கோகுல்ராஜ் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.