மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

0பார்த்தது
மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
மணப்பாறை அருகே கோட்டை பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் அண்ணாவி, கடந்த 26 ஆம் தேதி விவசாய நிலத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மகன் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், இன்று காலை அவரது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள சோளக்காட்டில் அண்ணாவி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய வையம்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி