துறையூர் அருகே உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சரோஜா (வயது 65) சம்பவம் நடந்த நேற்று (டிசம்பர் 25) உப்பிலியபுரத்தில் இருந்து தனியார் பேருந்தில் மாராடிக்கு சென்றுள்ளார். பேருந்து மாராடி அருகே சென்ற போது திருப்பம் ஒன்றில் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த சரோஜா கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.