திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துறையூர் கோட்டத்தில் ஜூன் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூன் இரண்டாம் தேதி அன்று துறையூர் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மின் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.