அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக, சபரிமலை விழாக்காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், ஓய்வு மற்றும் மருத்துவ உதவி வழங்கும் 15ஆம் ஆண்டு சிறப்பு முகாம் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள K K S மாமுண்டி கோனார் தோப்பில் துவங்கப்பட்டது. இந்த முகாம் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30ஆம் தேதி வரை, அதாவது 17.11.25 முதல் 14.01.26 வரை தொடர்ந்து 58 நாட்களுக்கு செயல்படும்.