டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு. ப. கிருஷ்ணன் முன்னிலையில், திருச்சி அதிமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளரும், தற்போதைய தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் மாநில தலைவரும், திருச்சி மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான எஸ். கந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு விழா திருச்சி நடைபெற்றது.