திருச்சியில் கஞ்சா விற்ற நபர் கைது அரை கிலோ கஞ்சா பறிமுதல்

3பார்த்தது
திருச்சியில் கஞ்சா விற்ற நபர் கைது அரை கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கள்ளிக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் புனிதவதி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கார்த்திக் என்பவர் தனது வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்தபோது பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.