திருவரம்பூரில் செல்போன் பறித்த நபர் கைது

417பார்த்தது
திருவரம்பூரில் செல்போன் பறித்த நபர் கைது
திருவரம்பூர் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆன்டனிராஜ், உடல்நிலை சரியில்லாத தாயுடன் ஆட்டோவில் சென்றபோது, மூன்று மர்மநபர்கள் அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து திருவரம்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், வடக்கு காட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி