மணப்பாறை வீரப்பூர் பெரியகாண்டி அம்மன் கோவில் தேரோட்டம்

1பார்த்தது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் உள்ள பொன்னர், சங்கர், பெரியகாண்டியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரியகாண்டியம்மன் பெரிய தேரோட்டம் இன்று மதியம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்து, கோலாகலமாக திருவிழாவை நடத்தினர். தேர் கோவில் முன்பிருந்து புறப்பட்டு, கோவிலைச் சுற்றி மீண்டும் நிலையை அடைந்தது.

தொடர்புடைய செய்தி