மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழ்மாள்பாளையம் மேலூர் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் தங்கராசு, நீரிழிவு நோயால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.