முசிறி சப் கலெக்டர் சுஷ்ரி சிவாங்கி குந்தியாவிடம் மலைக்குறவன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் மலைக்குறவன் சமூகத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும் இனச் சான்று அவசியம் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மலைக்குறவன் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் இனச் சான்று வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.