முசிறி: வருவாய்துறை ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

0பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணியில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு 25% பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி