துறையூர்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

66பார்த்தது
துறையூர்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
துறையூர் அடுத்த சோபனபுரத்தில் ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, விதை பந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் சுமார் 100000 விதைபந்துகளை தூவும் திட்டத்தின் துவக்க விழா சோபனபுரம் அரசு பள்ளியில் நடைபெற்றது. 

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் தலைமை வகித்தார். துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் அவர்களும் உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து விதை பந்துகளை வழங்கினார்கள். விழாவில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஜெரால்ட், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

விழாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் முக்கிய வீதிகளின் வழியே பதாகை ஏந்தி கோஷமிட்டு பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி