திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், எதுமலையைச் சேர்ந்த செல்வராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, நீதிபதி சண்முகப்பிரியா குற்றவாளி செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.