துறையூர் சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு கண்டித்து ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தளுகை ஊராட்சி மங்கப்பட்டி புதூரில் தமிழக அரசின் சார்பில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 100 சமத்துவபுர வீடுகளின் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி