திருச்சி கிராப்பட்டி விறகுப்பேட்டை சேர்ந்தவர் தங்கவேல் இவர் நேற்று மதியம் திருச்சி பழனி நகர் பாலம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மதுரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ரவுடி காளி ரஞ்சித் என்பவர் தங்கவேலிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தரும் மறுத்து ரவுடியிடம் இருந்து தப்பிச்சென்று எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து ரவுடி காளி ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.