திருச்சி: முதியவரை மிரட்டிய ரவுடி கத்தியுடன் கைது

68பார்த்தது
திருச்சி: முதியவரை மிரட்டிய ரவுடி கத்தியுடன் கைது
திருச்சி இபி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் லோகேஷ் என் எஸ் பி சாலை அருகே புகைப்படங்கள் விற்று வருகிறார். நேற்று (மார்ச் 12) இபி ரோடு அருகே நின்று கொண்டிருந்த லோகேஷிடம் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். 

இது குறித்து லோகேஷ் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரௌடியான தக்காளி முபாரக் என்கிற முகமது முபாரக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி