திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில், பூசாரி பூட்டிச் சென்றபோது கதவு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கத் தாலி திருடு போனது. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.