தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திருச்சியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாத் இயக்கப்பட்டு வந்த ரயில், வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூர், தாம்பரம் வழியைத் தவிர்த்து, ரேணிகுண்டா, திருத்தணி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடம் மாற்றத்தால் பயணிகளுக்கு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.