திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மகன் விஜயபாரதிக்கும் திருச்சியை சேர்ந்த மனிஷா என்பவருக்கும் திருமணம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே நடைபெற்றது. இந்த திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்கள் விஜயபாரதி - மனிஷாவை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, ரகுபதி, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், சிவசங்கர், மெய்யநாதன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் என பலர் கலந்து கொண்டனர்.