திருச்சி மருத்துவர் செவிலியர் பணியிடம் கலெக்டர் அறிவிப்பு

56பார்த்தது
திருச்சி மருத்துவர் செவிலியர் பணியிடம் கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடம் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் மணப்பாறை மற்றும் துறையூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒரு மருத்துவ பணியிடம், ஒரு செவிலியர் பணியிடம், ஒரு பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடம் மற்றும் திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 11 நகர சுகாதார மையங்களிலும், காலியாக உள்ள இரண்டு நகர நல சுகாதார மையங்களுக்கும் ஒரு மருத்துவர் பணியிடம், ஒரு செவிலியர் பணியிடம், ஒரு பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணியிடம் ஆகியவை மாத ஊதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட சுகாதார அலுவலர் சுகாதார அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், டிவிஎஸ் டோல்கேட், திருச்சி என்ற அலுவலகத்திலும், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 11 நகர சுகாதார மையங்களிலும், மாநகர நல அலுவலர் மாநகர நல அலுவலகம், பாரதிதாசன் சாலை, கண்ட்ரோல்மென்ட், திருச்சி அலுவலகத்திலும் வரும் மார்ச் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி