திருச்சி: கோவிலில் இ. காணிக்கை செலுத்தும் வசதி

79பார்த்தது
திருச்சி: கோவிலில் இ. காணிக்கை செலுத்தும் வசதி
திருச்சி பொன்னகரில் உள்ள ஸ்ரீ சுவர்ண விநாயகர் கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் இ-காணிக்கை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு பல்வேறு நடைமுறைகள் வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதன் ஒருபகுதியாக, திருச்சி கருமண்டபம் பொன்னகரில் உள்ள சுவர்ண விநாயகர் கோயிலில் கூட்ட நெரிசலின்போது, பக்தர்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-காணிக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ஜி. ஸ்ரீராம் தலைமை வகித்தார். 

இ-காணிக்கை வசதியை நவீன் முகவரண்மை உரிமையாளர் ஜோசப் ஜெரால்டு தொடங்கி வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கருமண்டபம் கிளை மேலாளர் விஜயலட்சுமி, வங்கி அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இ-காணிக்கை சேவை தொடங்கப்பட்டதும், பக்தர்கள் கியூ.ஆர். கோடு வசதியைப் பயன்படுத்தி காணிக்கை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி