திருச்சி: மகனை கத்தியால் தாக்கிய.. தந்தை கைது

64பார்த்தது
திருச்சி: மகனை கத்தியால் தாக்கிய.. தந்தை கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி விறகுபேட்டை தெருவை சேர்ந்தவர் சாம் மோசஸ் (வயது 19) இவரது தந்தை சாமுவேல் (வயது 50 ). இந்நிலையில் நேற்று இரவு மகன் வீட்டுக்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தந்தை கத்தியால் மகனை தாக்கி உள்ளார். இதில் வலது பக்கம் வயிற்றில் காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை சாமை கைது செய்து உள்ளனர்.
Job Suitcase

Jobs near you